முகப்பு
தமிழ்நாடு

திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.விழாவுக்கு பள்ளி நிறுவனர் மருத்துவர் அ.இராமமூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு

Updated On : 29 மார்ச், 2014 at 5:36 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:20 AM

திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.விழாவுக்கு பள்ளி நிறுவனர் மருத்துவர் அ.இராமமூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி ஸ்ரீ காமாட்சி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் மீனா குமாரி கலந்து கொண்டு மழலையர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து மழலையர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், விலங்குகளின் வேடமணிந்த குழந்தைகளின் அணிவகுப்பு, வினாடி- வினா, பருவகால மாற்றம், சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் கிஷோர் பாபு, ஜீனத், அரசி, கிறிஸ்டினா உள்ளிட்ட ஆசிரியர்கள், மழலையர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி முதல்வர் இரா.செல்வ வைஷ்ணவி அனைவரையும் வரவேற்றார். முடிவில் மாணவி தீப்தி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.