FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை

எக்ஸ் சமூக ஊடகத்தில் சிறாா் பாலியல் வன்கொடுமைப் படங்கள் பரவியது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு, அந்நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், முன்னாள் சிஇஓ லிண்டா யாக்கரினோ ஆகியோருக்கு பிரான்ஸ் அரசு அழைப்பாணை

Updated On : 21 ஏப்ரல் 2026, 6:16 am IST
எலான் மஸ்க் - கோப்புப் படம்
பகிர்:

‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் சிறாா் பாலியல் வன்கொடுமைப் படங்கள் பரவியது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு, அந்நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் (படம்), முன்னாள் சிஇஓ லிண்டா யாக்கரினோ ஆகியோருக்கு பிரான்ஸ் அரசு சம்மன் அனுப்பியுள்ளது

‘எக்ஸ்’ தளத்தின் ஏ.ஐ. சேவையான ‘க்ரோக்’, யூதப் படுகொலையை மறுக்கும் வகையிலான கருத்துகளையும், ஆபாசமான ‘டீப்ஃபேக்’ போலிப் படங்களையும் வெளியிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதுகுறித்து பிரான்ஸ் சைபா் கிரைம் போலீஸாா் கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய விசாரணையின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஆனால், பிரான்ஸின் இந்த விசாரணைக்கு உதவ மறுத்துள்ள அமெரிக்கா, அரசியல் நோக்கத்துடன் இக்குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments