வரதட்சணை புகார்:தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்
வரதட்சணை புகாருக்கு உள்ளான தலைமைக் காவலரை கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.கண்ணம்மாள், தாற்காலிகமாக
வரதட்சணை புகாருக்கு உள்ளான தலைமைக் காவலரை கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.கண்ணம்மாள், தாற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றிவந்தார் முருகன். இவர், கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது மனைவி உமா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்களாம். இந்தத தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், முருகனுக்கு கனகமுட்லு கிராமத்தைச் சேர்ந்த விஜயா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டதாம்.
இதையறிந்து உமா, கணவன் முருகனை கண்டித்தாராம். இந்த நிலையில், முருகன், அவரது தாயார், உறவினர்கள் மீது வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உமா புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் தேவிகாராணி வழக்குப் பதிந்து, முருகனை தேடி வந்தனர்.
இந்த நிலையில், முருகனை தாற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.கண்ணம்மாள் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.