முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரத்தில் பூக்கடை தொழிலாளர் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கீரனூரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (37). அவர் சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள கண்ணதாசன் என்பவரது பூக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:55 AM
பகிர்:

சிதம்பரத்தில் பூக்கடை தொழிலாளர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கீரனூரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (37). அவர் சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள கண்ணதாசன் என்பவரது பூக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சிதம்பரம் மந்தகரையில் உள்ள கடை உரிமையாளர் வீட்டில் தங்கி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சாப்பிட்டு விட்டு தான் தங்கியிருந்த அறையில் பிளாஸ்டிக் நாடாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கண்ணதாசன் சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.