மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
இப் பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள விலங்கியல் ஆய்வியல் நிறைஞர் (M.phil Zoology), சுற்றுச்சூழல் அறிவியலில் நிறைஞர்(M.phil Environmental Science) படிப்புகளுக்கான விண்ணப்பங்கள்
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (எம் பில்) படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொ) டி.தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இப் பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள விலங்கியல் ஆய்வியல் நிறைஞர் (M.phil Zoology), சுற்றுச்சூழல் அறிவியலில் நிறைஞர்(M.phil Environmental Science) படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவற்றுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இம் மாதம் 31 ஆம் தேதி கடைசி நாளாகும். விருப்பமுள்ள மாணவர்-மாணவிகள் www.msuniv.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.