தமிழ்நாடு

விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களிடம் இருந்து உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள்

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களிடம் இருந்து உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இம்மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு 5 ஆண்டுகளாக பணிக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது. இதில்  பயனடைய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினருக்கு 40 வயதிற்குள்ளும் இருப்பது அவசியம்.மேலும், நாள்தோறும் கல்லூரி சென்று வருவராகவோ, பணிபுரிந்து வருகிறவராகவோ அல்லது சுயதொழில் செய்கிறவராக்வோ இருக்கக் கூடாது. இதில்,  பயனடைய விரும்புவோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட கல்வித் தகுதியின் அடிப்படையிலேயே இத்தொகை வழங்கப்பட இருக்கிறது. இத்தொகை பெறுவதற்கு ஒவ்வொருவரும் தேசிய வங்கிக் கிளை ஒன்றில் கணக்கு தொடங்கியிருக்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தோல்வியடைந்தோருக்கு மாதந்தோறும் ரூ.100ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.150ம், பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.200ம், பட்டப்படிப்பு பதிவு செய்தோருக்கு ரூ.300ம் உதவி தொகை அளிக்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் கட்டாயம் தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். இவர்கள் தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து ஓராண்டுக்குள் இருந்தால் போதுமானாது. இதில், எஸ்.எஸ்.எல்.சி மற்றும் அதற்கும் குறைந்த வகுப்பு பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.300ம், பிளஸ்2 தேர்ச்சி பெற்று பதிவு செய்தோருக்கு ரூ.375ம், பட்டப்படிப்பு பதிவு செய்தோருக்கு ரூ.450ம்  உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகையை பெற வருமான உச்சவரம்பு எதுவும் கிடையாது.

இத்தொகை காலாண்டு தோறும் கணக்கு சரிபார்த்து, நேரடியாக அவரவர் வங்கிக் கணக்குகளின் மூலம் விடுவிக்கப்படும். இத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள்  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் விலையி்ல்லாமல் வழங்கப்படுகிறது. உடனே அதை பூர்த்தி செய்து குறிப்பிட்ட நாள்களுக்குள் நேரில் அளிக்கலாம். இத்திட்டம் நடைமுறையில் இருந்து வருவதால், ஏற்கனவே இத்தொகை பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. அதோடு, நிகழாண்டிற்கான சுய உறுதி மொழி ஆவணம் சமர்பிக்காத இளைஞர்கள் விரைவில் அளிக்கும்மாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.590 கோடி மோசடி: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவு!

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

ஹெட்மேயர், ரோவ்மன் பௌவல் அதிரடி: ஜிம்பாப்வேவுக்கு 255 ரன்கள் இலக்கு!

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

SCROLL FOR NEXT