தமிழ்நாடு

இளநிலை பயிற்சி அலுவலர் பதவிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை

இளநிலை பயிற்சி அலுவலருக்கான பணிக்காலியிடத்திற்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில்  தகுதியானவர்கள் பரிந்துரை செய்யப்பட இருக்கின்றனர்.

எஸ். பாண்டியன்

இளநிலை பயிற்சி அலுவலருக்கான பணிக்காலியிடத்திற்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில்  தகுதியானவர்கள் பரிந்துரை செய்யப்பட இருக்கின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணை இயக்குநரால்(கைவினைஞர் பயிற்சி) இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்காலியிடத்திற்கு தகுதியுடைய பதிவுதாரர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு மற்றும் அரசு அங்கிகாரம் பெற்ற பாலிடெக்னிக் கல்லூரியில் 3 ஆண்டு பட்டயம் பெற்று பதிவு செய்திருப்பது அவசியம் ஆகும். இதில், மெக்கானிக்கல் என்ஜினியரிங், கணிப்பொறி தொழில்நுட்பம், கேட்டரிங் டெக்னாலஜி, ஆட்டோமொபைல் என்ஜினியரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங், மெரைன் என்ஜினியரிங், டூல் அண்ட் மை மேக் என்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் என்ஜினியரிங், பேஷன் டெக்னாலாஜி, எம்ராயட்ரி நீடில் ஆர்ட் ஆகிய பிரிவுகளில் பட்டயம் பெற்று பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.1.2015 அன்றைய நாளில் ஆதிதிராவிடர் பழங்குடியினர், அருந்ததியினர் ஆகியோருக்கு 40 வயதிற்குள்ளும், பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு 37 வயதிற்குள்ளும், இதர பிரிவினருக்கு 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி வயது வரம்பு தளர்வு உண்டு.

இப்பணிக்கான மாநில அளவிலான பதிவு மூப்பு, கல்வித் தகுதி, வயது வரம்பு போன்ற விவரம் சூலக்கரையில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக  தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற 8-ம் தேதி காலை 11 மணிக்கு வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, கல்வி சான்றுகளுடன் நேரில் வந்து தங்கள் பெயர் பரி்ந்துரை செய்யப்படும் விவரங்களை அறிந்து கொள்ளலாம். எனவே மேற்குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் வருவோரின்  கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT