முகப்பு
தமிழ்நாடு

விராலிமலை கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலரை கண்டித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலரை கண்டித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:15 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலரை கண்டித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்பாட்டம் நடைபெற்றது

வட்டாரத் தலைவர் இ. ஜான்மரிய ஜோசப் தலைமை வகித்தார், இதில் மாநிலச் செயலாளர் இரா. தமிழ்செல்வி, மாநில துணைத்தலைவர் எம். ஏ. ராஜா பங்கேற்று பேசினர். இதில் மகப்பேறு விடுப்புக்கு அனுமதி வழங்க கையூட்டு கேட்கிறார் என்றும், ஆசிரியர்களை ஒருமைமையில் பேசுவதாகவும், கோரிக்கை விண்ணப்பங்களை தாமதபடுத்துவதாகவும், பள்ளி ஆண்டு விழவிற்கு சென்றுவருவதற்கு மகிழுந்து(கார்) கேட்கிறார் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்டாரச் செயலாளர் தா. ஜான் சவுந்தரராஜ், மாவட்டத் தலைவர் க. கருப்பையா, மாநிலகுழு உறுப்பினர் ச. அலெக்சாண்டர், மாவட்டச் செயலாளர் ச. வின்சென்ட், மாநில பொதுக்குழு உறுப்பினர் வெ. ராமன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.