முகப்பு
தமிழ்நாடு

காரைக்கால்: கலாமுக்கு ஓவியாஞ்சலி செலுத்திய ஆசிரியருக்கு ஆட்சியர் பாராட்டு

அப்துல் கலாம் உருவத்தை ஒரு வார காலமாக வரைந்து ஓவியாஞ்சலி செலுத்திய பள்ளி ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு ஜவாஹர்லால் நேரு அரசு

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:21 AM
பகிர்:

அப்துல் கலாம் உருவத்தை ஒரு வார காலமாக வரைந்து ஓவியாஞ்சலி செலுத்திய பள்ளி ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு ஜவாஹர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியரும், தேசிய மாணவர் படை அதிகாரியுமான காமராஜ், மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு துக்கம் அனுஷ்டித்த ஒரு வார காலத்தை ஓவியம் வரைய பயன்படுத்தினார்.

கடற்கரை சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே ஓவியம் வரைய இடம் தேர்வு செய்துகொண்டு, பென்சில் மட்டும் கோட்டோவியம் மூலமாக அப்துல் கலாம் உருவங்கள் பல கோணத்தில் வரைந்தார். இதுகுறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் இ.வல்லவன், கூடுதல் ஆட்சியர் எல்.முகம்மது மன்சூர் ஆகியோர் ஓவியம் வரையுமிடத்துக்கு சென்று ஆசிரியர் வரைந்த 13 ஓவியங்களை ஒவ்வொன்றாக பார்த்து ரசித்தனர்.

பிறகு மாவட்ட ஆட்சியர் இ.வல்லவன் கூறும்போது, இந்தியா வல்லரசாவதற்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் என்பதை கூறிவந்தவர் அப்துல் கலாம். அவர் மறைந்தாலும், அவரது வாக்குகள் மறையப்போவதில்லை. மாணவர்கள், இளைஞர்கள் நிச்சயமாக அதற்கேற்ப பாடுபட தங்களை தயார்படுத்திக்கொள்ளவேண்டும். அந்த  நம்பிக்கை உள்ளது எனவும், ஆசிரியரின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →