முகப்பு
தமிழ்நாடு

புதுவை சட்டப்பேரவை உறுதிமொழி குழுக் கூட்டம்

புதுச்சேரி சட்டப்பேரவை உறுதிமொழி குழுக்கூட்டம் புதன்கிழமை பேரவை வளாகத்தில் நடைபெற்றது. குழுத் தலைவரும், அரசு கொறடாவுமான ஜி.நேரு தலைமை தாங்கினார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:22 AM
பகிர்:

புதுச்சேரி சட்டப்பேரவை உறுதிமொழி குழுக்கூட்டம் புதன்கிழமை பேரவை வளாகத்தில் நடைபெற்றது. குழுத் தலைவரும், அரசு கொறடாவுமான ஜி.நேரு தலைமை தாங்கினார்.

குழு உறுப்பினர்கள் நமச்சிவாயம் (காங்.), அன்பழகன் (அதிமுக), நந்தாசரவணன் (திமுக), சிவா (என்.ஆர்.காங்.) பேரவை செயலாளர்  மோகன்தாஸ் மற்றும் அரசின் பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ. நமச்சிவாயம் பேசியதாவது: சட்டப்பேரவையில் மாநில அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. கடந்த 4 ஆண்டுகளில் முதல்வரும் ,  அமைச்சர்களும பல உறுதிகளை பேரவையில் அளித்தனர். ஆனால் இவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. வாக்குறுதிகளை  நிறைவேற்றுவதை கண்காணிக்கும் குழுவும் சரிவர செய்யவில்லை. குழு கூட்டத்தில் கேள்விகேட்கும்போது உடனடியாக பணிகளை செய்வதாக அதிகாரிகள்

தெரிவிக்கின்றனர். ஆனால் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டினார். இதே போல் அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகனும், அரசு பேரவையில் தரும் உறுதிமொழிகள், வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றுவதில்லை. அதிகாரிகள் எந்த நலத்திட்டத்தையும் செயல்படுத்தவில்லை எனக் குறிப்பிட்டார். அப்போது அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.