ஆடி அமாவாசை திருவிழா: தாணிப்பாறை மலை அடிவாரப் பகுதியில் ஆட்சியர் வே.ராஜாராமன் ஆய்வு
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அடிவாரப்பகுதியான தாணிப்பாறையில் பக்தர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன், மதுரை சரக டி.ஐ.ஜி மற்று்ம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் திங்கள்கிழமை மாலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அடிவாரப்பகுதியான தாணிப்பாறையில் பக்தர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன், மதுரை சரக டி.ஐ.ஜி மற்று்ம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் திங்கள்கிழமை மாலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம்-சந்தனமகாலிங்கம் திருக்கோயில் உள்ளது. இங்கு விழாக்காலங்களில் செல்வதற்கும், மற்ற நாள்களில் செல்லவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததோடு, தடையும் விதித்தது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று குறிப்பிட்ட நாள்களில் மட்டும் மலைக்கோயிலுக்கு செல்ல அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற 14-ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற இருக்கும் நாளில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில், அதற்கு முன்னதாகவே கடந்த 8-ம் முதல், வருகிற 18ம் தேதி வரையில் கோயிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, கடந்த மூன்று நாள்களாகவே பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு வந்து செல்கின்றனர்.
இத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அடிவாரப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் வசதியுடன் கழிப்பறைகள், தரைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக கழிப்பறைகள், மருத்துவ முகாமிற்கான அறை, சமுதாயக் கூடம், தாற்காலிக பேருந்து நிலையத்தில் செய்து கொடுக்கப்பட்டுள்ள மின்விளக்கு மற்றும் குடிநீர் வசதி, பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு அவர் ஆய்வு மேற்கொண்டார்.
Advertisement
அப்போது, மதுரை சரக டி.ஐ.ஜி ஆனந்த்குமார் சோமானி, மதுரை காவல் துறை கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதாரி, விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள் சக்கரவர்த்தி(விருதுநகர்), சங்கரேஸ்வரன்(ராஜாபாளையம்), ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.