முகப்பு
தமிழ்நாடு

ரேசன் கடைகளின் பதிவேடுகள்: கிராம சபை கூட்டத்தில் சமூக தணிக்கைக்கு உள்படுத்த வேண்டும்

விருதுநகர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கிராம சபைக் கூட்டத்தில் கூட்டுறவு நியாய விலைக்கடைகளின் பதிவேடுகளை சமூக தணிக்கைக்கு உள்படுத்த வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On : 11 ஆகஸ்ட், 2015 at 7:39 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 9:48 AM

விருதுநகர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கிராம சபைக் கூட்டத்தில் கூட்டுறவு நியாய விலைக்கடைகளின் பதிவேடுகளை சமூக தணிக்கைக்கு உள்படுத்த வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து ஆட்சியர் வே.ராஜாராமன் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: பொது விநியோக திட்டம் செயல்பாட்டில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். அதற்காக நியாய விலைக்கடையின் அனைத்து பதிவேடுகளையும் சமூக தணிக்கைக்கு உள்படுத்த வேண்டும் என உணவு வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கி்ராம பகுதிகளில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் கணக்குகள் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று அந்தந்த கிராம சபை கூட்டத்தின் போது சமூக தணிக்கைக்கு, சம்பந்தப்பட்ட ரேசன் கடை விற்பனையாளர்களால் ஆஜார்படுத்த வேண்டும். இதற்கு ஊராட்சி தலைவர் தலைவராக செயல்படுவார். அத்தணிக்கையின் போது கிராம பொதுமக்கள் நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருள்களின் ஒதுக்கீடு, குடும்ப அட்டைகளுக்கு விநியோகிக்கப்படும் பொருள்கள், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, பணியாளர்கள் விவரம் உள்ளிட்ட விவரங்களையும் விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும்.

Advertisement

பொதுவிநியோக திட்டத்தில் அரசு அளிக்கும் சேவை தொடர்பாக பொதுமக்கள்  கேள்விகள் கேட்பார்கள். அப்போது, சரியான விவரங்களை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் ஆகியோர் விளக்கமாக எடுத்துரைக்க தயாராக இருக்க வேண்டும். இதை கண்காணிக்க அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலர்கள் ஆகியோர் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.