தமிழ்நாடு

வேதாரண்யம் அருகே மது அருந்திய ஒருவர் சாவு: 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

 நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த தலை ஞாயிறில் மது அருந்தியதில் ஒவ்வாமை ஏற்பட்டு சனிக்கிழமை ஒருவர் உயிரிழந்தார்.

கே.பி. அம்​பி​கா​பதி

வேதாரண்யம் அருகே மது அருந்தியவர் சாவு5 பேர் மருத்துவமனையில் அனுமதி வேதாரண்யம், ஆக 15: நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் மது அருந்தியதில் ஒவ்வாமை ஏற்பட்டு சனிக்கிழமை ஒருவர் உயிரிழந்தார்.

பாதிப்படைந்த மேலும் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தலைஞாயிறைச் சேர்ந்த கண்ணன் என்பவர் சனிக்கிழமை இறந்தார்.இவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.  இந்த நிலையில்,இறந்தவர் வீட்டுக்குச் சென்ற சிலர் அந்த பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மதுவை குடிந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் மயங்கி விழுந்த 6 பேர்களில் சிங்காரவேலு மகன் நரேந்திரன்(19)மருந்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தார். பாதிப்படைந்த மணிவண்ணன்(19),சரவணன்(20),பாலமுருகன்(44),அஜித்குமார்(25),மாரிமுத்து(30)ஆகியோர் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்ததாதக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT