முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.2.33 கோடி ஒதுக்கீடு

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைப்பதற்கு ரூ.2.33 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற இருப்பதாக ஒன்றியக்குழு தலைவர் கி.கலாநிதி தெரிவித்தார்.

Updated On : 21 ஆகஸ்ட், 2015 at 8:51 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 9:48 AM

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைப்பதற்கு ரூ.2.33 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற இருப்பதாக ஒன்றியக்குழு தலைவர் கி.கலாநிதி தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், இந்த ஒன்றியப் பகுதியில் மழையால் சாலைகள் சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதன் அடிப்படையில் சேதமடைந்த சாலைகள் குறித்து ஒன்றிய மேற்பார்வையாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டது. அதில், முதல் கட்டமாக சேதமடைந்த சாலைகள், மழை நீர் வடிகால் அமைத்தல், பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு கிராம சாலைகள் பராமரிப்பு திட்டத்தின் மூலம் ரூ.2.33.கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.