விருதுநகர் மாவட்டத்தில் சமையலர், துப்புரவு பணிக்கான நேர்காணல்
விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் சமையலர் மற்றும் பகுதிநேர துப்புரவு பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 27-ம் தேதி முதல், தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

இம்மாவட்டத்தில் அதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் 19 சமையலர் மற்றும் 26 பகுதி நேர துப்புரவு பணியாளர் காலியிடம் உள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மாவட்ட அளவிலான தேர்வுக்குழு அமைத்து, தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
இப்பணிக்கான நேர்முகத் தேர்வு வருகிற 27, 28 ஆகிய நாள்களில் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற இருக்கிறது. இத்தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களுடன் மேற்குறிப்பிட்ட நாள்களில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Advertisement