விருதுநகரில் வடக்கு மாவட்ட த.மா.கா நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்
விருதுநகர் வடக்கு மாவட்ட த.மா.கா நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் தனியார் அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் வடக்கு மாவட்ட த.மா.கா நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் தனியார் அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் க.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். இதில், முன்னாள் மக்களவை உறுப்பினர் மற்றும் மேலிட பொறுப்பாளர் உடையப்பன் முன்னிலை வகி்த்தார். இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் அரசன் வி.கணேஷ்குமார், மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் என்.செல்வம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமமூர்த்தி, சந்தானம், மாவட்ட எஸ்.சி, எஸ்.டி பிரிவு தலைவர் முருகேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் அமிர்ஜான் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில், மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி வடக்கு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் தொகுதிக்கு 50 ஆயிரம் கையெழுத்து வீதம் வாங்குவது, விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கருந்திரி தயாரிப்பு தொழிலில் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருவதால், அதை தயார் செய்வதற்கு எளிய முறையில் உரிமம் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும். மக்களை நோக்கி என்ற சுற்றுப்பயணத்தில் விருதுநகர் மாவட்டத்திற்கு செப்-21ம் தேதி வருகை கரும் மாநில தலைவர் ஜி.கே.வாசனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.