விருதுநகர் அருகே வாகனத்தில் கருந்திரிகளை கடத்தியதாக 2 பேர் கைது
விருதுநகர் அருகே அனுமதியின்றி வாகனத்தில் கருந்திரிகளை கடத்திச் சென்றதாக 2 பேரை வச்சக்காரப்பட்டி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
விருதுநகர் அருகே அனுமதியின்றி வாகனத்தில் கருந்திரிகளை கடத்திச் சென்றதாக 2 பேரை வச்சக்காரப்பட்டி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
விருதுநகர் அருகே மத்தியசேனை-வச்சக்காரப்பட்டி சாலையில் பட்டாசு உற்பத்தி செய்ய பயன்படும் கருந்திரிகட்டுக்களை கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் காவல் சார்பு ஆய்வாளர் ஜெயராமன் தலைமையில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், சாக்கு பையில் 800 கருந்திரி கட்டுக்கள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை செய்ததில் சங்கரலிங்காபுரம் முனீஸ்வரன் காலனியைச் சேர்ந்த வேல்முருகன்(30) என்பது தெரியவந்தது.
Advertisement
அதேபோல், இதே சாலையில் சோரம்பட்டி அருகே வந்து கொண்டிருந்த வாகனத்தை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டதில், பொட்டலமாக 700 கருந்திரி கட்டுக்கள் இருந்தது. மேலும், விசாரித்ததில் கட்டனார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்(35) என்பது தெரியவந்து. மேலும், இது குறித்து வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்தனர். அதோடு, அவர்களிடம் இருந்து 1500 கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு அழிப்பதற்காக எடுத்துச் சென்றனர்.