ரயில்வே முன்பதிவு நிலையங்களில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்காக சிறப்பு மையங்களை அமைப்பதற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்குரிய புதிய விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் அண்மையில் அறிவித்தது.
இந்நிலையில் ரயில் நிலைய முன் பதிவு மையங்களில், டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்காக சிறப்பு கவுன்டர்களை அமைத்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை விநியோகிக்கும் ஒரு கவுண்டர் சிறப்பு கவுன்டராக மாற்றம் செய்யப்படும். இந்த சிறப்பு கவுன்டர்கள் இன்று முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை பதிவு செய்யும் கவுன்டர்கள் இல்லாத இடங்களில், ஒரு முன்பதிவு கவுன்டர், ரத்து செய்வதற்கான சிறப்பு கவுன்டராக குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் மாற்றம் செய்யப்படும்.
எனினும், இந்த சிறப்பு கவுன்டர்களில் 24 மணி நேரத்துக்குள் புறப்படும் ரயில்களுக்கான டிக்கெட்டுகளை மட்டுமே ரத்து செய்ய முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.