சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பெய்த மழையால், சென்னை சென்டர் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களிலிருந்து புறப்படும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் பல ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. ரயில் சேவை குறித்த தகவல்களை பெறுவதற்கு ரயில்வே நிர்வாகம் சிறப்பு சேவை தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.
இதன்படி சென்னை சென்ட்ரல் நிலையத்தை 044-25330714 என்ற எண்ணிலும், எழும்பூர் ரயில் நிலையத்தை 044-28190216 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை கட்டுப்பாட்டு அறை- Chennai Control Office :044-29015204, 044-29015208, மதுரை- 0452-2308250, திருச்சி -0431-2418992, 90038 64971, 90038 64960, தஞ்சாவூர் - 90030 33265, 04362-230131, விழுப்புரம் - 90038 64959.
மேலும் முகநூலில் www.facebook.com/pages/Southern-Railway என்ற முகவரியிலும், சுட்டுரையில் @SRailwayIndia என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.