ஸ்ரீவில்லிபுத்தூரில் கன மழை: 44 வீடுகள் சேதம்: விரைவாக நிரம்பும் 158 கண்மாய்கள்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை இரவு முதல் பெய்த கன மழைக்கு 44 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக வட்டாட்சியர் அன்னம்மாள் கூறினார்
தமிழ்நாடுஸ்ரீவில்லிபுத்தூரில் கன மழை: 44 வீடுகள் சேதம்: விரைவாக நிரம்பும் 158 கண்மாய்கள்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை இரவு முதல் பெய்த கன மழைக்கு 44 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக வட்டாட்சியர் அன்னம்மாள் கூறினார்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை இரவு முதல் பெய்த கன மழைக்கு 44 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாயும், தாலுகாவில் உள்ள 158 கண்மாய்கள் விரைவாக நிரம்பி வருவதாயும் வட்டாட்சியர் அன்னம்மாள் கூறினார்.
வியாழக்கிழமை காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் 12 செ.மீ மழை பெய்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெய்த மழையை அடுத்து மொட்டப்பத்தான் கண்மாய் திறந்துவிடப்பட்டது. இதனையடுத்து வடமலைக்குறிச்சி ஓடை, ஓட்டமடம், மாலைப்பட்டி பகுதிகளில் ஆக்கிரமிப்பு மற்றும் தாழ்வான பகுதியில் இருந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத் தலைவி செந்தில்குமாரி முத்துராஜ், நகராட்சி ஆணையாளர் பழனிவேல், வட்டாட்சியர் அன்னம்மாள் ஆகியோர் சம்பவ பகுதிகளுக்கு உடனடியாகச் சென்று ஜே.சி.பி. இயந்திரங்கள் கொண்டு நீர் வரத்துப் பாதைகளில் உள்ள அடைப்புகளை சீர் செய்து நீர் சீராக செல்ல நடவடிக்கை எடுத்தனர். இதனால் 44 வீடுகளின் சுவர்கள் உள்ளிட்டவைகளில் சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாயும், தாலுகாவில் உள்ள 158 கண்மாய்கள் விரைவாக நிரம்பி வருவதாயும் வட்டாட்சியர் கூறினார். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சுமார் 9 ஆண்டுகளுக்கு மேல் வறண்டு கிடந்த பெரியகுளம் கண்மாய்க்கு நீர் வந்து மடைகளின் வழியே வெளியே செல்கிறது. தொடர்ந்து இப் பகுதியில் மழை பெய்தால், அதனை மேற்கொள்வதற்கு வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாய் அதிகாரிகள் கூறினர்.