தமிழ்நாடு

மழை, வெள்ளம்: தமிழகத்தில் 269 பேர் பலி என ராஜ்நாத் சிங் மக்களவையில் தகவல்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் இதுவரை 269 பேர் உயிர் இழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் இன்று தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளார்.

IANS

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் இதுவரை 269 பேர் உயிர் இழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் இன்று தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் மழை, வெள்ளம் காரணமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 269 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மழை வெள்ளத்தால் இதுவரை ஆந்திர பிரதேசத்தில் 54 பேர் மரணமடைந்துள்ளனர்.

தமிழக வெள்ள நிலவரம் மிக கவலைக்குரியதாகவே உள்ளது. இதில் இரு வேறு கருத்து இல்லை என்ற ராஜ்நாத் சிங், சென்னை தற்போது தனித் தீவாக காட்சி அளிக்கிறது என்றார். சென்னையை இணைக்கும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய அரசு சார்பில் பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் தேவையான உதவிகளை வழங்குவதற்கு அரசு தயாராகவே உள்ளது.

இந்த விவாதத்தில் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, வெள்ள நிவாரணத்துக்கு தமிழக அரசு கேட்கும் அனைத்து நிவாரண உதவியையும் வழங்க வேண்டும் என்றார்.

இதுபோன்ற தேசிய பேரிடர்களை சந்திப்பதற்காக ஒரு தனித் துறையை ஏற்படுத்த வேண்டும் என்றார் சமாஜ்வாதி தலைவர் முலயாம் சிங் யாதவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT