புதுச்சேரியில் குடும்ப அட்டைக்கு ரூ. 4 ஆயிரம் நிவாரணம்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மக்களுக்கு அரசு சார்பில் குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மக்களுக்கு அரசு சார்பில் குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரசு சார்பில் குடும் அட்டை ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கப்படும்.
புதுச்சேரி அரசு சார்பில் மத்திய அரசிடம் ரூ. 182.45 கோடி நிவாரணம் கோரி ஏற்கெனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ. 200 கோடி கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதப்படும் என்றார் முதல்வர் ரங்கசாமி.