தமிழ்நாடு

சென்னை வெள்ளம்: காக்னிசன்ட் ரூ. 260 கோடி ஒதுக்கீடு

ஐ.டி. நிறுவனமான காக்னிசன்ட் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக ரூ. 260 கோடியை ஒதுக்கியுள்ளது.

PTI

ஐ.டி. நிறுவனமான காக்னிசன்ட் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக ரூ. 260 கோடியை ஒதுக்கியுள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

சென்னை மண்டலத்தில் இயங்கும் பிரதான ஐ.டி. நிறுவனங்களில் காக்னிசன்ட் (சி.டி.எஸ்.) நிறுவனமும் ஒன்றாகும். இங்குள்ள 11 அலுவலகங்களில் சுமார் 60 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக 40 மில்லியன் யு.எஸ். டாலர்கள் (சுமார் ரூ. 260 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் 10 டாலர்கள் (ரூ. 65 கோடி) தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கும், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கும் வழங்கப்படும்.

மீதமுள்ள 30 டாலர்கள் சி.டி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் மறுவாழ்வு மற்றும் நிறுவனத்துடன் வர்த்தகம் மேற்கொண்டுள்ள நிறுவனங்களுக்கு நீண்டகால கடன்களாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் மறுவாழ்வு பணிகளில் கார்பரேட் நிறுவனங்களின் பங்கு என்பது முக்கிய பங்கு வகிக்கும் என காக்னிசாட் தலைவர் கார்டன் கூறினார்.

சென்னை நகரின் மறு நிர்மாணத்தின் போது தேவைப்படும் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட தேவைகளுக்கு காக்னிசாட் துணை நிற்கும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொந்த நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் சாடல்

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT