தமிழ்நாடு

கூடங்குளம் முதலாவது அணு உலை ஜனவரி முதல் மீண்டும் இயங்கும்: மத்திய அரசு

பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலை ஜனவரி மாதம் முதல் மீண்டும் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது

PTI

பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலை ஜனவரி மாதம் முதல் மீண்டும் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது அணு உலை பராமரிப்பு பணிகளுக்காக கடந்த ஜூன் 24 ஆம் தேதி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

வருடாந்திரப் பராமரிப்பு பணிகளுக்காகவும், எரிபொருள் நிரப்புவதற்காகவும் மின் உற்பத்தி 60 நாள்களுக்கு நிறுத்தப்படுவதாக, அணு உலை நிர்வாகம் அறிவித்தது. ஆனால் அறிவித்தப்படி 60 நாள்களுக்குப் பிறகு மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை.

மேலும், கூடங்குளம் முதல் அலகில் மின் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழக முதல்வர் ஜெயலலியா வலியுறுத்தினார்.

இந்நிலையில் மக்களவையில் இன்று நடைபெற்ற விவாத்தின்போது, கூடங்குளம் அணுஉலை குறித்து அதிமுக உறுப்பினர் பி.ஆர் சுந்தரம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அணுசக்தி துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங், கூடங்குளம் முதலாவது அணு வழக்கமான பராரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் அது மீண்டும் இயக்கப்படும் என்றார்.

மேலும், அங்கு நிர்மானிக்கப்பட்டுள்ள இரண்டாம் அணு உலையிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT