முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் குடும்ப அட்டைகளுக்கு ரூ.280 மதிப்பிலான பொங்கல் பரிசு பொருள்கள் : முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வரும் ஜனவரி 5-ம் தேதி முதல் ரூ.280 மதிப்புள்ள பொங்கல் பொருள்கள் வழங்கப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:51 AM
பகிர்:

புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வரும் ஜனவரி 5-ம் தேதி முதல் ரூ.280 மதிப்புள்ள பொங்கல் பொருள்கள் வழங்கப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி :

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குடிமைப் பொருள் வழங்கல்துறை சார்பில் ரூ.280 மதிப்புள்ள பொங்கல் பரிசுப் பொருகள் விநியோகம் செய்யப்படும். இதில் தலா ஒரு கிலோ பச்சை அரிசி, சர்க்கரை, தலா அரை கிலோ துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெல்லம், பச்சையப்பயறு உள்ளிட்டவை அடங்கும். இதற்காக அரசு ரூ.9.4 கோடியை ஒதுக்கி உள்ளது.

பொங்கல் பரிசுப் பொருள்கள் வரும் ஜன.5-ம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் விநியோகம் செய்யப்படும். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களைச் சேர்ந்த 3.3 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இதன் மூலன் பயன் பெறுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.