அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்க உதவிய என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளி வடலூரை சேர்ந்த அந்தோணி செல்வராஜை கடலூர் மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் பாராட்டினார்.
கடந்த நவம்பர் மாதம் 9-ஆம் தேதி நெய்வேலி பகுதியில் கனமழை பெய்தது.
நெய்வேலி நகரியம் வட்டம் 24, இந்திராகாந்தி கலையரங்கம் அருகே குடிசை பகுதியில் வெள்ளம் புகுந்தது. அங்கிருந்த 100-ம் மேற்பட்ட மக்கள் குழந்தைகளுடன் உயிருக்கு போராடிய நிலையில் கூக்குரலிட்டுள்ளனர்.
அப்போது, அவ்வழியே சென்ற என்.எல்.சி நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளி வடலூரை சேர்ந்த அந்தோணி செல்வராஜ் கூக்குரலை கேட்டு சென்று பார்த்த போது அங்கு ஏராளமானோர் ஆபத்தான நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் விரைந்து சென்றவர் சிலரை தொடர்பு கொண்டு தீயணைப்பு மற்றும் தொழிலகப் பாதுகாப்பு படை துறையினருக்கு தகவல் அளித்தாராம்.
சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் விரைந்து செயல்பட்டு அங்கிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட எஸ்.பி., விஜயகுமார், என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளி அந்தோணி செல்வராஜை நேரில் அழைத்து பாராட்டினார். உடன் நெய்வேலி டி.எஸ்.பி., கலைச்செல்வன் உடனிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.