தமிழ்நாடு

தாயிடமே குழந்தையை ஒப்படைக்க மாமியாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

முதல் திருமணத்தின் போது பிறந்த குழந்தையை அதன் தாயிடமே ஒப்படைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டது.

PTI

முதல் திருமணத்தின் போது பிறந்த குழந்தையை அதன் தாயிடமே ஒப்படைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டது.

நாகப்பட்டிணத்தைச் சேர்ந்தவர் சுபா. இவருக்குமே மேனன் பாபு என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு காவ்யஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேனன் பாபு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சுபா தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

சில நாள்களுக்குப் பிறகு, அதாவது இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சுபா, சுசீந்திரன் என்பவரை மறு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய காவ்யஸ்ரீயை, மேனன் பாபுவின் தாய் காளியம்மாள் கடத்திச் சென்றுவிட்டார். தன் மகனுக்குப் பிறந்த குழந்தை தன்னுடன்தான் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

குழந்தை காவ்யாஸ்ரீ, கடத்தப்பட்டது குறித்து சுபா, போலீஸில் புகார் அளித்தும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர், குழந்தையின் உண்மையான பாதுகாவலர் அவரது தாயே. எனவே, காளியம்மாள் குழந்தை காவியஸ்ரீயை அவரது தாய் சுபாவிடம் உடனே ஒப்படைக்க உத்தரவிட்டனர். மேலும், குழந்தையை ஒப்படைப்பதற்கு தேவையான உதவியை செய்யுமாறு நாகப்பட்டிணம் போலீஸாருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

SCROLL FOR NEXT