முகப்பு
தமிழ்நாடு

விராலிமலை, இலுப்பூரில் வட்டாட்சியர் அலுவலகம், பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர்

விராலிமலை மற்றும் இலுப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:55 AM
பகிர்:

விராலிமலை மற்றும் இலுப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

விராலிமலை-மணப்பாறை சாலையில் உள்ள சமுதாயகூடத்தில் தற்காலிக வட்டாட்சியர் அலுவலகத்தையும், இலுப்பூரில் ரூ. 2.05 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார். அப்போது பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் அதிமுகவினர் கொண்டாடினர்.

புதிய அலுவலகம் மற்றும் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்,வட்டாட்சியர் எஸ். பி. மனோகரன், புதிய வட்டாட்சியர் சாமிநாதன், விராலிமலை ஒன்றியக்குழுத் தலைவர் மு. சுப்பையா, ஆத்மா குழுத்தலைவர் எஸ். பழனியாண்டி,பி. சாம்பசிவம்,வட்டார வளர்ச்சி அலுவலர் வி. உதயகுமாரி, து. பாஸ்கர் இலுப்பூர் பேருராட்சித் தலைவர் குரு. ராஜமன்னார், செயல் அலுவலர் வ. சுலைமான்சேட், ஆர். தர்மலிங்கம், வெல்கம் மோகன், ஆர். ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர், ஆ. பெரியசாமி, மணிமாலாசெந்தில், ஜெ. ஆர். அய்யப்பன், வி. முருகேசன், சி. தீபன்சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.