பயன்படாத நிலையில் பயணிகள் நிழற்குடைகள்
செய்யாறில் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிழற்குடைகள், பயணிகளுக்கு பயன்படாத நிலையில் இருந்து வருகின்றன.
தமிழ்நாடுபயன்படாத நிலையில் பயணிகள் நிழற்குடைகள்
செய்யாறில் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிழற்குடைகள், பயணிகளுக்கு பயன்படாத நிலையில் இருந்து வருகின்றன.
செய்யாறில் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிழற்குடைகள், பயணிகளுக்கு பயன்படாத நிலையில் இருந்து வருகின்றன.
கிராமங்களில் வசிக்கும் மக்கள் மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், பள்ளி- கல்லூரிகள் உள்ளிட்டவற்றுக்கும், கிராமங்களில் இருப்பவர்கள் அத்தியாவசிப் பொருள்களுக்காக நகரப் பகுதிக்குச் சென்று வரவும் பேருந்தில் பயணிக்கின்றனர். இதில் முதியோர், பெண்கள் உள்ளட்டோர் சற்று இளைப்பாரவும், மழை-வெயிலிலிருந்து காத்துக்கொள்ளவும் அரசு சார்பில் பயணிகளுக்கான பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பயணிகள் நிழற்குடைகளானது கிராமப் பகுதிகளில் ஒன்றியங்கள் சார்பிலும், நகரப் பகுதிகளில் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பிலும் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்ற பேருந்து நிழற்குடைகள் செய்யாறு, அனக்காவூர், வெம்பாக்கம் ஆகிய ஒன்றியங்களில் சுமார் 75 க்கும் மேற்பட்டவை உள்ளன. இவைகளில் பெரும்பான நிழற்குடைகள் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளன.
செய்யாறு அரசு கலைக்கல்லூரி அருகில் அமைந்துள்ள பேருந்து நிறுத்த நிழற்குடை, புரிசை கிராமத்தில் அமைந்துள்ள பேருந்து நிறுத்த நிழற்குடை ஆகியன சேதமடைந்த நிலையில் உள்ளன.
வெம்பாக்கம் ஒன்றியம் அப்துல்லாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையைச் சுற்றி அதிக அளவில் சூழ்ந்து அசுத்தமாகக் காணப்படுகிறது. செய்யாறு வீட்டு வசதி வாரிய பேருந்து நிழற்குடை, தூசி அப்துல்லாபுரம் கூட்டு சாலைப் பகுதியில் அமைந்துள்ள நிழற்குடை ஆகியவற்றை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதுபோன்ற பல்வேறு காரணங்களினால் பயணிகள் நிழற்குடை பயணிகளுக்கு பயன்படாத நிலையில் இருந்து வருகின்றன.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு பேருந்து நிழற்குடைகள் பயன்படும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.