முகப்பு
தமிழ்நாடு

அடைமழையிலும் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே அடைமழையிலும் அணிவகுத்து பக்தர்கள் வியாழக்கிழமை சாமி தரிசனம் செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:08 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே ஸ்ரீஅரங்கநாதர் பெருமாள் சுவாமி கோயிலில் அடைமழையையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் வியாழக்கிழமை சாமி தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருக்கோவிலூரை அடுத்த திருவரங்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅரங்கநாதப் பெருமாள் ஸ்வாமி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இக்கோயிலில் கடந்த 22-ம் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்கி 31-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து வியாழக்கிழமை அதிகாலை 4.55 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

இதையடுத்து திருவரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஆங்கில புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி ஓரே நாளில் வந்ததால், கடந்த காலங்களை காட்டிலும் இந்தாண்டு வரலாறு காணாத அளவுக்கு பக்தர்கள் வருகை தந்தனர்.

இந்நிலையில் ஏழத்தாழ 1 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். இப்பகுதியில் அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 7.30 மணிக்கு லேசான மழை பெய்தது.

இருந்தும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்வதையே நோக்கமாக கொண்டனர். பாதுகாப்புப் பணியில் போலீஸார் அதிகளவில் ஈடுபட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →