முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துமனை மருத்துவர்களுக்கு அமைச்சர்கள் பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று, கைவிடப்பட்ட 8 பேருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில்

தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துமனை மருத்துவர்களுக்கு அமைச்சர்கள் பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று, கைவிடப்பட்ட 8 பேருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில்

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:23 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று, கைவிடப்பட்ட 8 பேருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து சிறப்பாக சேவை செய்த அரசு மருத்துவர்களுக்கு தமிழக அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ள 27 பேரில் 7 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது. இவர்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் ராஜாகுணசீலன் தலைமையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் நோயாளிகளுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தவற்காக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, அங்கு கவனிக்க இயலாது என்ற நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 பேர் கடந்த வாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதனை அறிந்த அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை மருத்துவர் ராஜாகுணசீலனை வெகுவாக பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில்: ஊராட்சி பகுதிகளுக்கு தேவையான துப்புரவுப் பணியாளர்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் ஊராட்சி ஒன்றியம் சார்பில் தற்காலிக பணியாளர்களாக நியமித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எந்த வகையிலும் காய்ச்சல் பரவுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும். தற்போது காய்சல் பரவுவது முழு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தற்போது நகராட்சி நிர்வாகம் சாலை ஓரங்கள், தெரு ஓரங்களில் கொசு மருந்துகளை அடித்து வருகிறது. இதனை வீடுகள் தோறும் அடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

ஆய்வின் போது சுகாதாரத் துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →