முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் குடியரசு தினவிழா

விருதுநகர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சிகளில் குடியரசு தினவிழா திங்கள்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 10:00 AM

விருதுநகர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சிகளில் குடியரசு தினவிழா திங்கள்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

     விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தினவிழாவிற்கு மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமை வகித்து வளாகத்தில் தேசிய கொடியேற்றினார். இதில் வழக்குரைஞர்கள் சங்கத்தின் செயலாளர் ஆனந்தன், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரன் கொடியேற்றினார். இதில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் மகேந்திரபாண்டியன், காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement

    விருதுநகர் மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்தில் அதன் தலைவர் அ.வசந்தா பங்கேற்று கொடியேற்றும் நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   விருதுநகர் நகராட்சி வளாகத்தி்ல் நடந்த விழாவிற்கு ஆணையாளர்(பொறுப்பு) மணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் மா.சாந்தி பங்கேற்று வளாகத்தில் கொடியேற்றி வைத்து மரியாதை செய்தனர்.

   விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கலடசுமி, தனசேகரன் உள்ளிட்ட வட்டார ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

   இதேபோல், கூரைக்குண்டு ஊராட்சியில் அதன் தலைவர் வேலாயுதமும், பாவாலி ஊராட்சியில் அதன் தலைவர் நாகராஜனும், சிவஞானபுரம் ஊராட்சியில் அதன் தலைவர் கிருஷ்ணமூர்த்தியும், சூலக்கரை ஊராட்சியில் தலைவர் முத்துராலிங்கமும், வச்சக்காரப்பட்டி ஊராட்சியில் அதன் அனந்தராமனும் பங்கேற்று தேசிய கொடியேற்றி மரியாதை செய்தனர். மேலும், அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகளையும் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.