தமிழ்நாடு

சிபிஐ விசாரணையை எதிர்கொண்டுள்ள அன்புமணி எப்படி ஊழலை ஒழிப்பார் யுவராஜா கேள்வி  

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சிபிஐ விசாரணையை எதிர்கொண்டுள்ள அன்புமணி எப்படி ஊழலை ஒழிப்பார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமாகா இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா.  தமாகா இளைஞர் அணி நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், இளைஞர் அணி மாநிலத்துணைச்செயலர் எ.அருண்பிரகாஷ் தலைமையில் நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெ. விஜயபாஸ்கர்

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சிபிஐ விசாரணையை எதிர்கொண்டுள்ள அன்புமணி எப்படி ஊழலை ஒழிப்பார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமாகா இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா.  தமாகா இளைஞர் அணி நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், இளைஞர் அணி மாநிலத்துணைச்செயலர் எ.அருண்பிரகாஷ் தலைமையில் நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாநில பொதுச்செயலர் கே.எஸ்.ரகுநந்தகுமார், நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி தலைவர்கள் டி.அ௫ள், ஏ.வி.அ௫ள் ராஜேஷ் முன்னிலை வகித்தனர்.  மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் து.சு.மணியன், மாவட்ட தலைவர்கள் என்.இளங்கோ, கே.செல்வகுமார், மாவட்ட செயலர் ஜி.கே.வி.கோவிந்த். உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இதில் பங்கேற்ற மாநில இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:மாநில, மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து நகர மற்றும் வட்டார இளைஞர் அணி நிர்வாகிகள் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளனர்.  தமிழகத்தில் ஊழல் குற்றச்சாட்டு இல்லாத தலைவர் ஜி.கே.வாசன் மட்டும்தான். ஊழலற்ற ஆட்சியை தருவோம் என கூறிக்கொள்ளும் பாமக, அக்கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி சிபிஐ விசாரணையை எதிர்கொண்டுள்ளார். இவர் எப்படி ஊழலை ஒழிப்பார். மதுக்கடைகளை மூடுவோம் என்கின்றனர், ஆனால் பாமக  மாநாடு, பொதுக்கூட்டம் நடக்கும் பகுதிகளில் எல்லாம் மது விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.  மதவாத கட்சியான பாஜக மோடியை முன்னிலைப்படுத்தி பொய் பிரசாரங்களை செய்து ஆட்சியை பிடித்தது,

இதுபோல் ஜாதி அரசியல் செய்யும் பாமகவும் அன்புமணியை முன்னிலைப்படுத்தி தமிழகத்தில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைக்கிறது. ஆனால் தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள்.  மதத்தின் பெயரால் அரசியல் செய்துவரும் பாஜக, ஜாதியின் பெயரால் அரசியல் செய்துவரும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே காமராஜர் குறித்து பேச அருகதையில்லை.  தமிழகத்தில் வடமாவட்டங்களில் நடந்த ஜாதி கலவரங்களுக்கு காரணமாக இருந்தது பாமகதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரியில் நடந்த ஜாதி கலவரத்துக்கு யார் காரணம் என்பதை மக்கள் அறிவார்கள்.  ஊழலுக்கு எதிராக பேசும் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்,  பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி தடுமாறும் திமுகவோடு கூட்டணி சேர முயற்சித்து வருகிறார்.

இதனால் காங்கிரஸ் கட்சியினர் பலரும் அவரை மதிப்பதில்லை.  தமிழகத்தில் மதுவினால் இளைஞர்களும், மாணவர்களும் சீரழிந்து வருகின்றனர். இதனை உடனடியாக தடுக்க வேண்டும். படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT