முகப்பு
தமிழ்நாடு

பிரான்ஸ் தேசிய தின விழா: போர்நினைவுச் சின்னத்தில் கொடியேற்று விழா

பிரான்ஸ் நாட்டு தேசிய தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் செவ்வாய்க்கிழமை கொடியேற்றப்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:58 AM
பகிர்:

பிரான்ஸ் நாட்டு தேசிய தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் செவ்வாய்க்கிழமை கொடியேற்றப்பட்டது.

கடந்த 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சியை பாரீஸ் நகரில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலையை மக்கள் புரட்சி மூலம் தகர்த்து முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர்.

இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் அக்காலத்தில் மின்சாரம் இல்லாததால் மக்கள் தீப்பந்தம் ஏந்தி புரட்சி செய்து வென்றனர்.

இத்தினத்தை நினைவு கூறும் வகையில் பிரான்ஸ் நாடு முழுவதிலும், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாழும் அனைத்து நகரங்களிலும் ஜூலை 13-ம் தேதி பேரணி, தீப்பந்த ஊர்வலம் நடைபெறும். அதன் ஒரு பகுதியாக புதுவையிலும் ஊர்வலம் நடந்தது.

இதன் தொடர்ச்சியாக கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் துணை தூதர் பிலிப் ஜான்வியர் காமியமா, மாவட்ட ஆட்சியர் டாக்டர் சுந்தரவடிவேலு ஆகியோர் கொடியேற்றி மரியாதை செலுத்தினர்.

அதில் அரசு உயரதிகாரிகள், ராணுவ, முன்னாள் ராணுவத்தினர், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக இரவு கடற்கரைச் சாலையில் வாணவேடிக்கை, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.