முகப்பு
தமிழ்நாடு

வனவிலங்குகளை காப்பதில் அனைத்து துறைகள் ஒருங்கிணைப்பு தேவை

வனவிலங்குகளை காப்பதில் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு தேவை என வனவிலங்குக் குற்றத் தடுப்புப் பிரிவு தென்மண்டல துணை இயக்குநர் எஸ்.பி.மூர்த்தி கூறியுள்ளார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:59 AM
பகிர்:

வனவிலங்குகளை காப்பதில் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு தேவை என வனவிலங்குக் குற்றத் தடுப்புப் பிரிவு தென்மண்டல துணை இயக்குநர் எஸ்.பி.மூர்த்தி கூறியுள்ளார்.

புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற வனத்துறை, காவல்துறை அதிகாரிகளுக்கான திறன் கூட்டு பயிற்சி முகாமில் அவர் பேசியதாவது:

சர்வதேச அளவில் இந்தியா அதிக வனவளத்தைக் கொண்டுள்ளது. 2 பல்லுயிர் பெருக்க மண்டலங்கள், அரிய கடல்வாழ் பல்லுயிர் பெருக்க மண்டலம் உள்ளது. புதுவையிலும் 670 ஹெக்டேர் வனப்பரப்பு உள்ளது. 45 கி.மீ தூர கடலோரம் உள்ளது. அரிய வகை கடல் உயிரினங்கள் வசிக்கின்றன.

வனவிலங்கு குற்றத்தை தடுப்பதில் வனத்துறை மட்டும் தனியாக செயல்பட முடியாது. காவல்துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காóவல்துறையினருக்கும் அதிகாரங்கள் உள்ளன. மேலும் நமது நாடு பரந்த கடலபரப்பை கொண்டுள்ளது. இதனால் வனவிலங்குகள் கடத்தலைத் தடுக்க சுங்கத்துறை, கடலோரக் காவல்படை, மத்திய காவல்படை போன்றவற்றின் ஒருங்கிணைப்பு அவசியமாகும். கடந்த 6 ஆண்டுகளாக வனவிலங்கு குற்றத் தடுப்புப் பிரிவு இயங்கி வருகிறது.

இதன் கீழ் 5 பிராந்திய மையங்கள், 3 துணை மையங்கள் உள்ளன. அனைத்து மாநில வனத்துறை, காவல்துறையினருடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். மேலும் அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியையும் குற்றத் தடுப்புப் பிரிவு அளித்து வருகிறது. இதன் கீழ் மூத்த வனத்துறை அதிகாரி வனவிலங்கு குற்றங்களை எவ்வாறு விசாரணை செய்வது, சாட்சிங்களை சேகரிப்பது என்பது குறித்தும்,

மூத்த வழக்குரைஞர், வனவிலங்கு சட்டடங்கள் குறித்தும் விளக்குவர். வனக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிக தண்டனை வழங்க வனப்பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது என்றார் மூர்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.