முகப்பு
தமிழ்நாடு

விருதுநகரில் கடை உரிமையாளரை தாக்கியவர் கைது

விருதுநகரில் வணிக வளாக உரிமையாளரை குடிபோதையில் கல்லால் தாக்கி காயப்படுத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.

பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:30 AM

விருதுநகரில் வணிக வளாக உரிமையாளரை குடிபோதையில் கல்லால் தாக்கி காயப்படுத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.

 விருதுநகர் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் மணிகண்டன்(28).  இப்பகுதியில் இவருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. அதில், அம்பேத்கார் நகரைச் சேர்ந்த அல்போன்ஸ்(32) என்பவர் வணிக வளாகப் பகுதியில் அமர்ந்து மதுக் குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தாராம். இதை உரிமையாளர் மணிகண்டன் பலமுறை தட்டிக் கேட்டாராம். அதேபோல், வெள்ளிக்கிழமை இரவிலும் வணிக வளாகப் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்ததை பார்த்து தட்டிக் கேட்டதால், ஆத்திரம் அடைந்த நிலையில் அல்போன்ஸ் கல்லால் தாக்கி மணிகண்டனை காயப்படுத்தினாராம்.

    இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன் அடிப்படையில் அல்போன்ஸ் மீது வழக்கு பதிந்து போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.