தமிழ்நாடு

இளைஞர்கள் கடின உழைப்பை கடைப்பிடிக்க வேண்டும்: ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்.

இளைஞர்கள் கடின உழைப்பை கடைப்பிடிக்க வேண்டும் என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்.

கு. வைத்திலிங்கம்

இளைஞர்கள் கடின உழைப்பை கடைப்பிடிக்க வேண்டும் என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்.

கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சியில் பள்ளி விழாவில் பங்கேற்க செல்வதற்காக திருச்சி சுற்றுலா மாளிகையிலிருந்து புறப்பட்ட போது, செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது:

ஈகைத் திருநாளாம் ரம்ஜான் வாழ்த்துகளை பொதுமக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய நிலையில் இளைஞர்கள் தங்களது அறிவுத்திறனை பெருக்கிக் கொள்ள வேண்டும். கடின உழைப்பு, பிரச்னைகளைக் கண்டு அஞ்சாமை ஆகிய மூன்றும் இளைஞர்களுக்கு இருக்க வேண்டும். இந்த மூன்றும் இருந்தால் அவர்கள் வாழ்வில் அனைத்தும் வெற்றிதான்என்றார் அப்துல்கலாம்.

அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இயற்கை வேளாண் கருத்தரங்கிலும், அதைத் தொடர்ந்து அரியலூரில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவிலும் பங்கேற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், இரவு திருச்சி சுற்றுலா மாளிகையில் தங்கினார்.

சனிக்கிழமை கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவிலும், அதைத் தொடர்ந்து மதுரை நிகழ்ச்சியிலும் பங்கேற்ற அப்துல்கலாம் மீண்டும் திருச்சி வந்து, விமானம் மூலம் புதுதில்லி புறப்பட்டுச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT