நிலத்தடி நீர் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம்
நிலத்தடி நீர் பாதுகாப்பு, மழை நீரை சேமிப்பு குறித்த ஆலேசானை கூட்டம் பாகூர் களஞ்சியம் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிலத்தடி நீர் பாதுகாப்பு, மழை நீரை சேமிப்பு குறித்த ஆலேசானை கூட்டம் பாகூர் களஞ்சியம் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாண்டிகேன் தொண்டு நிறுவன நிர்வாகி பானர்ஜி, ஆரோவில் நகர அமைப்பு குழு டாம், ஜூலியோ, புதுச்சேரி பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர், இயற்கை விவசாயிகள் சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, புதுச்சேரி அறிவியல் இயக்க செயலாளர் ரகுநாத், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஆக்கிரமிப்பால் அழிக்கப்பட்ட ஏரி, குளங்களை துôர் வாரி மழை நீரை சேமிக்க வேண்டும். தண்ணீர் சிக்கனம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சட்ட விரோதமாக நிலத்தடி நீரை பயன்படுத்தும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களை கண்டறிந்து தண்டிக்க வேண்டும்.
நீராதரங்களான ஏரி, குளம் போன்றவற்றை நல திட்ட பணிகளுக்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். பள்ளி பாடத்திட்டத்தில் நீர் நிலைகள் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்களை சேர்க்க வேண்டும். நீர்நிலைகளில் மருத்துவம் மற்றும் ரசாயன கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து விவசாயிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் தண்ணீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு இயக்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.