பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
ஒப்பந்தப்படி வழங்கப்பட்டு வந்த போனûஸ கடந்த ஆண்டு வழங்காத நிர்வாகத்தை கண்டிப்பது, கடந்த ஆண்டுக்கான போனûஸ ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனே வழங்க வேண்டும், ஒப்பந்ததாரருக்கு சேர வேண்டிய தொகையில் போனஸ் வழங்கிட ஒப்புதல் தந்த பின்னும் தராமல் நிர்வாகத்தினர் மறுக்கின்றனர்.
உடன்பாட்டின்படி போனஸ் தராமல் ஏமாற்றுவதை கண்டித்தும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர்கள் ஏ.முருகையன், எஸ்.சங்கரன் தலைமை தாங்கினர். பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் ஏ.சுப்பிரமணியன், என்.கொளஞ்சியப்பன், எஸ்.குமார், எஸ்.உஷா, பி.மகாலிங்கம் விளக்கவுரை ஆற்றினர். கிளைச்செயலர் முருகதாஸ் நன்றி கூறினார்.