பஸ்ஸில் படியில் பயணித்த மாணவனின் கால் விரல்கள் துண்டானது
திருச்சுழி அருகே அரசு பேருந்தில் படியில் பயணித்த மாணவனின் கால் விரல்கள் துண்டான சம்பவம் தொடர்பாக நடத்துநர் மற்றும் ஓட்டுநர் ஆகியோரை செவ்வாய்கிழமை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சுழி அருகே அரசு பேருந்தில் படியில் பயணித்த மாணவனின் கால் விரல்கள் துண்டான சம்பவம் தொடர்பாக நடத்துநர் மற்றும் ஓட்டுநர் ஆகியோரை செவ்வாய்கிழமை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சுழியைச் சேர்ந்த லூக்கேஷ்ராஜ்(15). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் காலையில் பள்ளிக்கு செல்வதற்கு அரசு பேருந்தில் ஏறி படியின் நின்று கொண்டு காலை தொங்கவிட்டுக் கொண்டு வந்தாராம். அப்போது, குலசேகரநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே வேகத்தடையில் ஏறி இறங்கும் போது கால் தரையில் உரசியதில் இரண்டு விரல்கள் துண்டானது. உடனே காயம் அடைந்த மாணவனை அருப்புக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக லூக்கேஷ்ராஜ் திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு அரசு பேருந்து நடத்துனர் பிரின்ஸ் கிருபாகரன்(50), ஓட்டுநர் ஜெயநாராயணன்(42) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.