முகப்பு
தமிழ்நாடு

மதுபானக்கடத்தலை தடுப்பது குறித்து தமிழக-புதுவை அதிகாரிகள் ஆலோசனை

மதுபானக் கடத்தலைத் தடுப்பது தொடர்பாக தமிழகம்-புதுவை மாநில உயரதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:03 AM
பகிர்:

மதுபானக் கடத்தலைத் தடுப்பது தொடர்பாக தமிழகம்-புதுவை மாநில உயரதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் அரசு மதுபானங்களை கொள்முதல் செய்து விற்று வருகிறது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மதுபானங்கள் அரசு மற்றும் தனியார் மூலம் விற்கப்படுகிறது.

தமிழகத்தைக் காட்டிலும் மதுபானங்கள் விலை புதுவையில் மிகவும் குறைவு என்பதால் அங்கிருந்து தமிழகத்துக்கு பல்வேறு வகைகளில் மதுபானங்கள் கடத்தப்படுகின்றன.

இதனால் தமிழகத்தில் மதுபான விற்பனைக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதைத் தடுக்கும் வகையில் மதுபான கடத்தலை தடுப்பது குறித்து தமிழக-புதுவை உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.