விருதுநகர்: மாணவ, மாணவிகளுக்கு வழங்க 22,409 மிதிவண்டிகள் ஒதுக்கீடு
விருதுநகர் மாவட்டத்தில் அரசு சார்பில் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக 22409 விலையில்லா மிதிவண்டிகள்
விருதுநகர் மாவட்டத்தில் அரசு சார்பில் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக 22409 விலையில்லா மிதிவண்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், இம்மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் விலையில்லா சைக்கிள்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், நிகழாண்டிற்கான ஒதுக்கீடு செய்து அந்தந்த பள்ளி வளாகங்களில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூலை இறுதி வாரம் முதல் ஆகஸ்டு முதல் வாரத்திற்குள் கொடுத்து முடிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
Advertisement
அதன் அடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டவுடன், அது தொடர்பான தகவலை www.agaram.tn.gov.in/freecycles2015 என்ற இணைய தள முகவரியில் உடனே அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவு செய்து அனுப்பி வைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.