விருதுநகர் மாவட்ட நூலகர்களுக்கு இரு நாள் பயிற்சி முகாம்
விருதுநகர் மாவட்ட நூலகர்களுக்கான இரு நாள் பயிற்சி முகாம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடுவிருதுநகர் மாவட்ட நூலகர்களுக்கு இரு நாள் பயிற்சி முகாம்
விருதுநகர் மாவட்ட நூலகர்களுக்கான இரு நாள் பயிற்சி முகாம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட நூலகர்களுக்கான இரு நாள் பயிற்சி முகாம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
மத்திய அரசின் கலாச்சாரச் துறை, கொல்கத்தா ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை, தமிழக நூலக இயக்குநரகம் ஆகியோவை இணைந்து இப் பயிற்சி முகாமை நடத்தின.வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிறைவு நாள் விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். துணை வேந்தர் ச.சரவணசங்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட நூலக அலுவலர் ஜெகதீசன் வரவேற்றார்.
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் இயக்குநரும், லிங்கா குளோபல் பள்ளியின் செயலாளருமான எஸ்.அர்ஜூன் கலசலிங்கம், பதிவாளர் வெ.வாசுதேவன், மாணவர் சேர்க்கைப் பிரிவு டீன் எஸ்.என்.ராமசாமி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
பயிற்சி முடித்த நூலகர்களுக்கு சான்றிதழை வழங்கி வேந்தர் க.ஸ்ரீதரன் சிறப்புரையாற்றினார். பயிற்சியில் மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நூலகர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் மைய பிபின் சந்திரபால் நூலக தலைமை நூலகர் டாக்டர் ஞானசேகர் செய்திருந்தார். அருப்புக்கோட்டை நூலகர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.