மாணவர்களின் இலக்கு அடுத்தவர்களை சார்ந்து இருக்கக் கூடாது: சார் ஆட்சியர்
மாணவர்களின் எதிர்கால இலக்கு, அடுத்தவர்களைச் சார்ந்து இருக்கக் கூடாது என்று சிவகாசி சார் ஆட்சியர் அமர்குஷ்வா கூறினார்.
தமிழ்நாடுமாணவர்களின் இலக்கு அடுத்தவர்களை சார்ந்து இருக்கக் கூடாது: சார் ஆட்சியர்
மாணவர்களின் எதிர்கால இலக்கு, அடுத்தவர்களைச் சார்ந்து இருக்கக் கூடாது என்று சிவகாசி சார் ஆட்சியர் அமர்குஷ்வா கூறினார்.
மாணவர்களின் எதிர்கால இலக்கு, அடுத்தவர்களைச் சார்ந்து இருக்கக் கூடாது என்று சிவகாசி சார் ஆட்சியர் அமர்குஷ்வா கூறினார்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சனிக்கிழமை வருங்கால வழிகாட்டிப் பயிற்சிக் குழு தொடக்க விழா வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.சுப்புராஜ் வரவேற்றார்.
வருங்கால வழிகாட்டிப் பயிற்சிக் குழுவை தொடங்கி வைத்து சிவகாசி சார் ஆட்சியர் பேசுகையில் கூறியதாவது: இக் கல்லூரியில் மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமானதாக்க ஆங்கிலப் புலமைப் பயிற்சி, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு, சுய தொழில் பயிற்சி, மாணவர்கள் தர நிர்ணக் குழு, மீடியா மற்றும் புகைப்படப் பிரிவு, என்.சி.சி., என்.எஸ்.எஸ்., தமிழ் மன்றம் என பத்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு குழுக்கள் தொடங்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது சிறப்பானது.
மாணவர்கள் வருங்காலத்தை நிர்ணயிக்கும் முன், அதற்கான தனி இலக்கை நிர்ணயம் செய்ய வேண்டும். அதே சமயம் அந்த இலக்கு, பெற்றோர், நண்பர்கள், உறவினர்களைச் சார்ந்து இருக்கக் கூடாது. தம் தம் திறமையை ஆராய்ந்து அதில் முன்னேற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்றார் அவர். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேராசிரியை சீனிரத்னா நன்றி கூறினார்.