முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழிக்குப்பழி கொலை: நால்வர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழிக்குப் பழியாக ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழிக்குப்பழி கொலை: நால்வர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழிக்குப் பழியாக ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:06 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழிக்குப் பழியாக ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நால்வர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், குன்னூர்-என்.லட்சுமியாபுரத்தைச் சேர்ந்தவர் பெரியகாளிமுத்து மகன் பார்த்திபராஜா (42). இவரது மனைவி பஞ்சவர்ணம் (40).

இதே இடத்தைச் சேர்ந்த சுப்பையா மகள் ஆனந்தவள்ளி என்பவருக்கும் பார்த்திபராஜாவுக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. ஆனந்தவள்ளி ஏற்கனவே கணவரை இழந்தவர். இது தொடர்பாக ஆனந்தவள்ளி தரப்பினர் பார்த்திபராஜாவை கண்டித்துள்ளனர்.

ஆனந்தவள்ளிக்கு பலருடன் தவறான பழக்கம் இருப்பது பார்த்திபராஜாவிற்கு தெரிவந்ததுள்ளது. இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆனந்தவள்ளி மிரட்டி வந்துள்ளார். இதனால் ஆத்திரமுற்ற பார்த்திபராஜா, ஆனந்தவள்ளியை 30.1.2011-ம் தேதி கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டார். இது தொடர்பான வழக்கில் பார்த்திபராஜா கைது செய்யப்பட்டார். வழக்கு விருதுநகரில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

திங்கள்கிழமை வழக்கு விசாரணைக்கு ஆஜராகிவிட்டு, இரவு பார்த்திபராஜா மீனாட்சிபுரம் விலக்கில் இறங்கி கொளிஞ்சிபட்டியில் உள்ள தனது தங்கை பவானிதேவி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்தரப்பினர் தன்னை கொலை செய்து விடுவார்கள் என்று தனது மைத்துனருக்கு போன் செய்துள்ளார். மைத்துனர் சமுத்திரம் வந்து அவரை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது புதிய தமிழகம் பிரமுகரும், ஆட்டோ ஓட்டுநருமான ஆனந்தவள்ளியின் தம்பி மணிவண்ணன் (எ) மாணிக்பாட்ஷா, ஆனந்தவள்ளியன் மகன் மகேஸ்வரன், ஆனந்தவள்ளியின் அண்ணன் முருகானந்தம் மற்றும் சிவகாசி பள்ளபட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் லிங்கம் ஆகியோர் சேர்ந்து பார்த்திபராஜாவை வெட்டி கொலை செய்துள்ளார்கள்.

இது குறித்து பார்திபராஜா மனைவி பஞ்சவர்ணம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் நால்வர் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →