முகப்பு
தமிழ்நாடு

விராலிமலையில் பள்ளி மாணவி மாயம்: பெற்றோர் போலிஸில் புகார்

விராலிமலை அருகே திங்கள்கிழமை பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை என்று மாணவியின் பெற்றோர் விராலிமலை போலிஸில் புகார் தெரிவித்துள்ளனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

விராலிமலை அருகே திங்கள்கிழமை பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை என்று மாணவியின் பெற்றோர் விராலிமலை போலிஸில் புகார் தெரிவித்துள்ளனர்.

விராலிமலை அருகே உள்ள விருதாப்பட்டியைச் சேர்ந்த ஜோதிவேல் மகள் ஜெயந்தி(13) இவர் கவரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை பள்ளிக்கு சென்ற ஜெயந்தி வீடு திரும்பவில்லையாம். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் ஜெயந்தி கிடைக்காத நிலையில் விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் அ. மா. செந்தில்மாறன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.