தமிழ்நாடு

மீத்தேன் திட்டம்: சாதகமாக செயல்படும் நிலைபாடு சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு இல்லை

காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தால் விளைநிலங்கள் பாதிப்பு இருக்கும் என்பதால் திட்டத்துக்கு சாதகமாக செயல்படும் நிலைபாடு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு

கே.பி. அம்​பி​கா​பதி

காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தால் விளைநிலங்கள் பாதிப்பு இருக்கும் என்பதால் திட்டத்துக்கு சாதகமாக செயல்படும் நிலைபாடு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு இல்லை என அதன் முதுநிலை இயக்குநர் வி.செல்வம் தெரிவித்தார்.

மீத்தேன் எடுக்கும் திட்டம் தொடர்பாக தமிழக அரசு அறிவித்துள்ள தொழில்நுட்ப வல்லுநர் குழுவில் எம்.எஸ்.சுவாமிநாதன் நிறுவனமும் உறுப்பினராக உள்ளது.இந்த நிலையில்,இந்த கருத்தை அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் 120 விவசாயிகளுக்கு மரம் ஏறும் கருவிகளை அளிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆராய்ச்சி நிறுவன முதுநிலை இயக்குநர் செல்வம்,விவசாயிகளிடம் மேலும் பேசியது: இதனிடையே,ஆதரவாக சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் செயல்பாடு இந்த திட்டத்தை நிறைவேற்ற சாதகமாக இருக்கும் என சில அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.இந்த கருத்து தவறானது.

மீத்தேன் எடுப்பதால் நிலத்தடி நீர்வளத்தில் உப்புத் தன்மை அதிகரித்து,விளைநிலம் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளது.இதனால்,இந்த திட்டத்துக்கு சாதகமாக செயல்படவோ,விவசாயிகளை,விவசாயத்தை பாதிக்கும் வகையில் கொண்டுவரப்படும்  எந்த திட்டத்துக்கும் ஆதரவாகவோ செயல்படும் திட்டம் இல்லை என்றார்மேலும்,வேதாரண்யம் பகுதியில் தென்னை மரத்தில் இருந்து பதநீர் எடுத்து புதிய தொழில் நுட்பத்தில் விற்பணை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும்.இதற்கு,தென்னை வளர்ச்சி வாரியத்தின் உதவியுடன் தென்னை சாகுபடியாளர்கள் குழுக்கள் ஏற்படுத்தப்படும்.

செவ்வரளிப் பூ சாகுபடி பரப்பு விரிவுப்படுத்தவும் திட்டங்கள் உருவாக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT