முகப்பு
தமிழ்நாடு

பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்தால் நாட்டின் பொருளாதாரம் எளிதில் முன்னேறும்: ஏ.கே.பட்டாபிராமன்

பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்தால், நாட்டின் பொருளாதாரம் எளிதில் முன்னேற்றம் காணும் என்று, டி.சி.எஸ். நிறுவனத்தின் தென் மண்டல அங்கீகார செயல்முறைத் தலைவர் ஏ.கே.

தமிழ்நாடு

பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்தால் நாட்டின் பொருளாதாரம் எளிதில் முன்னேறும்: ஏ.கே.பட்டாபிராமன்

பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்தால், நாட்டின் பொருளாதாரம் எளிதில் முன்னேற்றம் காணும் என்று, டி.சி.எஸ். நிறுவனத்தின் தென் மண்டல அங்கீகார செயல்முறைத் தலைவர் ஏ.கே.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:56 AM
பகிர்:

பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்தால், நாட்டின் பொருளாதாரம் எளிதில் முன்னேற்றம் காணும் என்று, டி.சி.எஸ். நிறுவனத்தின் தென் மண்டல அங்கீகார செயல்முறைத் தலைவர் ஏ.கே.பட்டாபிராமன் கூறினார்.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் பொறியியல் கல்லூரியின் 9-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை கல்வி நிறுவனங்களில் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர் தலைமையில் நடைபெற்றது. தாளாளர் பழனிச்செல்வி, சிந்துஜா தங்கபிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் வி.பி.எம்.எஸ்.தங்கபிரபு விழாவைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.முதல்வர் ஆர்.ராஜசேகரன், வரவேற்று, அறிக்கையை சமர்ப்பித்தார்.

381 மாணவிகளுக்கு பொறியியல் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை வழங்கி, டி.சி.எஸ். நிறுவனத்தின் தென் மண்டல அங்கீகார செயல்முறைத் தலைவர் ஏ.கே.பட்டாபிராமன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

தென் தமிழகத்திலேயே முதல் முறையாக பெண்களுக்கென ஆரம்பிக்கப்பட்ட இந்த கல்வி நிறுவனத்தில், அனைத்து வகையான படிப்புகளும் ஒரே வளாகத்தில் உள்ளது சிறப்பானது. மிகவும் பின்தங்கிய இப் பகுயின் ஏழை கிராமப்புற மாணவிகளின் முன்னேற்றத்திற்காக, 2002-ம் ஆண்டு 25 மாணவிகள் மற்றும் 10 பேராசிரியர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பொறியியல் கல்லூரியில் தற்போது 1000 மகளிர் படிக்கிறார்கள். இவர்களுக்கு 85 பேராசிரியர்கள் கற்றுத் தருவது இக் கல்லூரியின் மீது இப் பகுதி மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது.

இன்று பட்டம் பெறும் மாணவிகளில் பல்கலைக்கழக தேர்வு எழுதிய 224 பேரில் 221 பேர் வெற்றி பெற்று பட்டங்களை பெறுகிறார்கள். இது 98.66 சதவீத வெற்றியாகும். அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் முதல் பத்து கல்லூரிகளில் இக் கல்லூரியும் ஒன்று என்ற பெருமையை பெற்றுள்ளது.அண்மையில் வெளிவந்த பருவத் தேர்வு முடிவில் இளங்கலை பொறியியல் தேர்வு எழுதிய 145 மாணவிகளில் 141 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். இது அண்ணா பல்கலைக்கழக அளவில் 600 கல்லூரிகளில் இக் கல்லூரி 39-வது இடத்திலுள்ளது பாராட்டுக்குரிய விஷயம்.

ஆண்களுக்கு இணையாக பெண்கள் முன்னேற்றம் காண, இளங்கலை படிப்புடன் படிப்பை நிறுத்தாமல் முதுகலை படிப்பையும் மாணவிகள் படித்து முடிக்க வேண்டும். நேரத்தை வீணாக்கக் கூடாது. பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்கும் வரை காத்திராமல், சிறிய நிறுவனங்களில் வாய்ப்புகள் கிடைக்கும் போது பணிக்குச் சேர்ந்து, சிறப்பாக பணிபுரிந்து தொழில் நுட்பங்களைக் கற்று பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண வேண்டும். 1968-ல் 3 பேருடன் தொடங்கப்பட்ட டி.சி.எஸ். நிறுவனத்தில் இன்று 3.80 லட்சம் பேர் பணிபுரிகிறார்கள். இதில் 33 சதவீதத்திற்கு மேற்பட்டோர் சுமார் 1 லட்சம் பேர் பெண்கள் ஆகும்.

விழாவில் தொழிலதிபர் மாணிக்கவாசகம், கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள அனைத்ததுக் கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →