விராலிமலை அருகே இளம்பெண் மாயம்
தோட்ட வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என்று பெண்ணின் தந்தை வியாழக்கிழமை விராலிமலை போலிஸில் புகார் தெரிவித்துள்ளார்.
தோட்ட வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என்று பெண்ணின் தந்தை வியாழக்கிழமை விராலிமலை போலிஸில் புகார் தெரிவித்துள்ளார்.
விராலிமலை அருகே உள்ள கோமங்கலம் ஊராட்சி பெருமாபட்டியைச் சேர்ந்தவர் வீரமலை(67) இவரது மகள் இளஞ்சியம்(21) இருவரும் அப்பகுதி விளைநிலங்களில் தோட்டவேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மே, 11- ம் தேதி தோட்டவேலைக்கு சென்ற இளஞ்சியம் வீடு திரும்பவில்லையாம், உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் மகள் இளஞ்சியம் கிடைக்கவில்லையென்று தந்தை வீரமலை விராலிமலை போலிஸில் அளித்த புகாரினைத் தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் ந. புகழேந்தி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.