முகப்பு
தமிழ்நாடு

அம்பை: பணத்தை பறக்க விட்டு ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் ரூ.2 லட்சம் திருட்டு

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் செவ்வாய்க்கிழமை வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் இருந்து ரூ. 2 லட்சத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:27 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் செவ்வாய்க்கிழமை வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் இருந்து ரூ. 2 லட்சத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை  போலீஸார் தேடி வருகின்றனர்.

விக்கிரமசிங்கபுரம் அகஸ்தியர்பட்டியை சேர்ந்தவர் கே.எஸ். ஆறுமுகம் (64). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர் செவ்வாய்க்கிழமை அம்பாசமுத்திரத்தில் பிரதான சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள கனரா வங்கியில் தனது கணக்கில் இருந்து ரூ. 2 லட்சத்தை எடுத்தார்.

பணத்தை பையில் வைத்து வங்கியின் வெளியே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளின் முன்பக்க கவரில் வைத்தாராம். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், கீழே ரூபாய் நோட்டுகளை பறக்க விட்டு ஆறுமுகத்தின் கவனத்தை திசை திருப்பி, மோட்டார் சைக்கிளில் இருந்த பணப்பையை எடுத்து கொண்டு தப்பிவிட்டனர்.

பட்டப் பகலில் கண் இமைக்கும் நேரத்தில் ஆசிரியரிடம் இருந்து ரூ. 2 லட்சத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலிறிந்த அம்பாசமுத்திரம் போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வங்கியின் கேமிராவில் மர்ம நபர்கள் பதிவாகி உள்ளனரா என கேமரா பதிவினை பார்வையிட்டனர். வழக்குப் பதிந்து போலீஸார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →